நீலகிரி முன்னாள் காவல்துறை அதிகாரி மகனுக்கு கொடநாடு வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்குச் சொந்தமான பங்களா நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கொடநாடு எஸ்டேட்டில் உள்ளது. இங்குக் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. சேலம் ஆத்தூரைச் சேர்ந்த கனகராஜ் தலைமையிலான கும்பல் இவற்றை நடத்தியது. இவர்களில் கனகராஜ் சாலை விபத்தில் இறந்து விட்டார். காவல்துறையினர் இதில் தொடர்புடையதாக சயான், வாளையார் மனோஜ் உள்படக் கேரளாவைச் சேர்ந்த 10 பேரைக் கைது […]