சென்னை: திருவண்ணாமலை தீபத்திருவிழாவையொட்டி, தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. அதன்படி இன்றுமுதல் 27ந்தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் தெரிவித்து உள்ளது. கார்த்திகை தீப திருவிழாவை ஒட்டி இன்று முதல் 27 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா உலகப்புகழ் பெற்றது. நினைத்தாலே முக்தி தரும் […]
