கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே இணைந்து நடிக்கும் திரில்லர் வெப் தொடர்

நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே இருவரும் இணைந்து புதிய வெப் தொடர் ஒன்றில் நடிக்கவுள்ளனர். இதனை அறிமுக இயக்குனர் தர்மராஜ் ஷெட்டி இயக்குகிறார். 'அக்கா' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்தத் தொடரை யஷ்ராஜ் பிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. பழிவாங்கும் திரில்லர் பாணியில் உருவாகும் இத்தொடர் பழிவாங்கும் கதையை அடிப்படையாக கொண்டது என கூறப்படுகிறது. தொடர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

பாலிவுட்டில் படங்களை மட்டுமே தயாரித்து வந்த யஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் அண்மையில் தனது முதல் வெப் சீரிஸான 'தி ரயில்வே மென்' தொடரை தயாரித்தது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்தத் தொடர் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இதன் அடுத்த கட்டமாக கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே இணையும் தொடரை உருவாக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.