
மன்னிப்பது தெய்வப் பண்பு : த்ரிஷா பதிவு
நடிகர் மன்சூர் அலிகான், சமீபத்தில் நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசினார். இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தலின் படி மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீஸில் ஆஜராகி நேற்று விளக்கமும் அளித்தார் மன்சூர் அலிகான்.
மன்னிப்பு கேட்க மாட்டேன் என கூறி வந்த மன்சூர் இன்று, ‛‛எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம் வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக!!'' என கவிதை நடையில் ஒரு அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் த்ரிஷா தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛தவறு செய்வது மனித இயல்பு. அதை மன்னிப்பது தெய்வ பண்பு'' என பதிவிட்டுள்ளார்.
இதன்மூலம் த்ரிஷா, மன்சூர் அலிகான் இடையேயான பஞ்சாயத்து முடிவுக்கு வரும் என தெரிகிறது.