திருவண்ணாமலை: தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று மாலை திருவண்ணாமலையின் 2668 அடி உயரத்தில் லட்சகணக்கான பக்தர்கள் விண்ணதிர அரோகரா கோஷம் எழுப்பிய நிலையில், மகா தீபம் ஏற்றப்பட்டது. இன்று காலை திருவண்ணாமலை பகுதியில் மழை பெய்த நிலையிலும், லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து, சிவபெருமானின் ஆசி பெற்றனர். தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்தில் வரும் முக்கிய நிகழ்வான திருக்கார்த்திகை வரும் இன்று (நவம்பர் 26) உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின்போது அனைத்து […]
