இந்தியாவில் என்னுடைய சொந்த மாநிலமான உத்தர பிரதேசத்தில் கூட என்னுடைய தாத்தாவிற்கு சிலை அமைக்கப்படவில்லை தமிழ்நாட்டில் தான் முதன் முதலில் அமைக்கப்பட்டுள்ளது என்று வி.பி. சிங்கின் பேத்தி தெரிவித்துள்ளார். சமூக நீதி காவலரான வி.பி.சிங்கிற்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என்று ஏப்ரல் மாதம் தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இதனையடுத்து வி.பி.சிங் நினைவு நாளான இன்று சென்னை மாநிலக் கல்லூரி வாளகத்தில் அவரது முழு உருவச் சிலை திறக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிலையைத் […]
