நடிகர் பிரபு மகளை மணக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்

திரிஷா இல்லேனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகீரா போன்ற படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். கடைசியாக அவர் இயக்கிய மார்க் ஆண்டனி படம் சூப்பர் ஹிட்டானது. அடுத்து இவர் அஜித் படத்தை இயக்க போவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர் நடிகர் சிவாஜி வீட்டு குடும்பத்தில் மருமகன் ஆக போகிறார். சிவாஜியின் பேத்தியும், நடிகர் நடிகர் பிரபுவின் மகளுமான ஐஸ்வர்யாவை இவர் திருமணம் செய்ய போகிறார். சமீபத்தில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் வரும் டிச., 15ல் சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் திருமணம் நடைபெற உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.