ஐதராபாத் தெலுங்கானாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆட்டோவில் சென்று வாக்கு சேகரித்துள்ளார். நாளை மறுநாள் தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் தெலுங்கானாவுக்குப் படையெடுத்துள்ளனர் இதில்.காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், செயலர் பிரியங்கா காந்தியும் இணைந்து பொதுக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். ராகுல் காந்தி ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் உணவு […]
