சென்னை: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களின் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதி முடிவடையும் நிலையில், அதற்கான அவகாசத்தை மேலும் ஒருவாரம், அதாவது டிசம்பர் 7ஆம் தேதி நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் கீழ் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு முறையான ஆசிரியர்களை நியமனம் செய்யாமல், காண்டிராக்ட் முறையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், […]