கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பின் விழா இன்று மாலை நடக்கவுள்ளது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

அவரை வரவேற்று சாலையின் இரண்டு புறங்களிலும் கொடிகள், பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். இதையடுத்து காவல்துறையுடன் அதிமுகவினர் மற்றும் கிறிஸ்தவ அமைப்பினர் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் அமைச்சர் வேலுமணி, “சட்டத்துக்கு கட்டுப்பட்டு நிற்கிறோம். சாலையை மறித்து போராடி, உடனடியாக உயர் அதிகாரிகளை இங்கு வர வைக்க முடியும். அதிமுகவினருக்கு அனுமதி மறுப்பீர்கள், திமுகவிற்கு மட்டும் எப்படி அனுமதி கொடுப்பீர்கள்.

மு.க. ஸ்டாலின், உதயநிதி மட்டுமல்ல அமைச்சர் வந்தால் கூட அதிகளவு பிளக்ஸ் வைக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிகே போலீஸ் உரிய பாதுகாப்பு வழங்குவதில்லை. சிறுபான்மை மக்கள் நிகழ்ச்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் வருவது உங்களுக்கு பிடிக்கவில்லை.
நான் முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா. சாலையில் நின்று பேசிக் கொண்டிருக்கிறேன். எங்கள் வழக்கறிஞர்களை எதற்காக மிரட்டுகிறீர்கள். புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைக்க வேண்டாம்.

இதேபோல திமுக பிளக்ஸ் வைப்பதற்கும் அனுமதிக்கக் கூடாது. காவல்துறை பொதுவாக நடந்து கொள்ள வேண்டும். கிறிஸ்தவ அமைப்பினர் பொதுவானவர்கள். அவர்களை அவமதிப்பது போல காவல்துறையின் செயல்பாடு உள்ளது.” என்றார். இந்த வாக்குவாதம் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.