
தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து
கடந்த 1995ம் ஆண்டில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், மீனா, சரத்பாபு ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் 'முத்து'. கவிதாலயா பிலிம்ஸ் தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படம் இந்தியாவில் வசூலில் சாதனை படைத்தது தாண்டி ஜப்பான் நாட்டில் புதிய சாதனை உருவாக்கி பல வருடங்களாக தக்க வைத்திருந்தது.
சமீபத்தில் முத்து திரைப்படம் தெலுங்கு பதிப்பில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வருகின்ற டிசம்பர் 2ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது என அறிவித்ததைத் தொடர்ந்து, தற்போது முத்து படம் தமிழ்நாட்டிலும் வருகின்ற டிசம்பர் 8ம் தேதி அன்று வெளியாகுவதாக அறிவித்துள்ளனர். இதனை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகின்றனர்.