ஐதராபாத்: நாளை தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்பட அனைத்து பொருட்களும் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி தொடங்கி உள்ளது. வாக்குப்பதிவையொட்டி, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 119 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்டு தெலுங்கானா மாநிலத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொகுதிகளில், 2,290 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இந்த தேர்தலில் 3.17 கோடி வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற தயாராக உள்ளனர். […]
