புதுடெல்லி: ஐந்து மாநில தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 18 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஏடிஆர் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 4 மாநிலங்களில் இம்மாதம் தேர்தல் நடைபெற்றது. தெலங்கானாவில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இத்தேர்தலில் வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை தன்னார்வ அமைப்பான ஜனநாயக சீர்திருத் திங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) ஆய்வு செய்து, அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
ஐந்து மாநில தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 18% பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இதில் 12% பேர் தங்கள் மீது கடும் குற்ற வழக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு தருவதற்கு நியாயமான காரணங்கள் இருக்க வேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2020-ம் ஆண்டு அறிவுறுத்தியது.
ஆனால் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, 5 மாநில தேர்தல்களில் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் அரசியல் கட்சி களிடையே எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
தெலங்கானாவில் குற்ற வழக்கு கள் கொண்ட வேட்பாளர்கள் அதிகஎண்ணிக்கையில் உள்ளனர். இங்கு போட்டியிடும் அனைத்து முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களில் 24%முதல் 72% பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக அறிவித்துள்ளனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 45 வழக்குகள், 27 கொலை முயற்சி வழக்குகள் மற்றும் 7 கொலை வழக்குகளும் இதில் அடங்கும்.
மிசோரம் மாநிலத்தில் குற்ற வழக்குகள் கொண்ட வேட்பாளர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. இங்கு முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களில் 3% முதல் 10% பேர் வரை தங்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கு, கொலை முயற்சி வழக்கு மற்றும் கொலை வழக்கு இருப்பதாக இங்கு எந்த வேட்பாளரும் தெரிவிக்கவில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களில் 68% பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன, 43% பேர் கடும் குற்ற வழக்குகள் இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இதையடுத்து பாரத் ராஷ்டிர சமிதி வேட்பாளர்களில் 48% பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம், பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
சொத்து மதிப்பு: 5 மாநில தேர்தலில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.3.36 கோடியாக உள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக் கிறது. மொத்த வேட்பாளர்களில் 29% பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனனர்.