
ரூ.60 கோடியில் உருவாகும் விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் படம்
லவ் டூடே படத்தில் நடித்து வெற்றி பெற்ற பிறகு இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதனை முதலில் கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், தற்போது இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் தயாரிக்கின்றார். இதில் பிரதீப் ரங்கநாதன் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா, மிஷ்கின் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தை முதலில் ரூ. 70 கோடி பட்ஜெட்டில் உருவாக்க பேச்சுவார்த்தை நடைபெற்று இப்போது ரூ. 60 கோடி பட்ஜெட்டில் படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது.