விஜய் – வெங்கட் பிரபு படத்தில் விஜய்யின் தங்கையாக நடிக்கிறாரா இவானா? `லவ் டுடே' நாயகியின் லைன் அப்!

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `தளபதி 68′-யில் விஜய்யின் தங்கையாக இவானா நடிக்கிறார் என்ற பேச்சு, கோலிவுட்டில் பரவி வருகிறது. `லவ் டுடே’க்குப் பிறகு தனி கவனம் பெற்று வரும் இவானா, `தளபதி 68’ல் நடிக்கிறாரா என்பது குறித்து கோலிவுட் வட்டாரத்தில் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இனி…

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை இவானா. தமிழில் பாலாவின் இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘நாச்சியார்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு கடந்த ஆண்டில் வெளியான ‘கோமாளி’ பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘லவ் டுடே’வில் நாயகியானார் இவானா. அந்தப் படம் அவருக்கு ஒரு பிரேக்காக அமைந்தது.

தோனியுடன் இவானா

அதன்பிறகு ‘எல்.ஜி.எம்’ என்ற படத்திலும் நடித்தார். கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தயாரித்த படமிது. ‘லவ் டுடே’வின் வெற்றி, இவானாவைத் தெலுங்கு பட உலகம் வரை அழைத்துச் சென்றது. அங்கே விஜய்யின் ‘வாரிசு’ படத் தயாரிப்பாளரான தில் ராஜூவின் மருமகனான ஆசிஷ் ரெட்டி நடிக்கும் ‘செல்ஃபிஷ்’ படத்தில் கமிட் ஆனார்.

அதன் படப்பிடிப்பும் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கிடையே ஜி.வி.பிரகாஷின் ஜோடியாக ‘கள்வன்’ படத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டார்கிது தவர ‘காம்ப்ளக்ஸ்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்யின் ‘தளபதி 68’ படத்தில் விஜய்யின் தங்கையாக இவானா நடிக்கிறார் என்ற பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. இது குறித்து இவானா தரப்பில் விசாரித்தால் என்ன சொல்கிறார்கள்?

இவானா

“இரண்டு மாதத்திற்கு முன்னரே அவரை ‘தளபதி 68’ படத்தில் நடிக்கக் கேட்டனர். படத்தின் கதையும் இவானாவிற்கு சொல்லப்பட்டது. ஆனால், அவரது கதாபாத்திரம் தங்கை அல்ல என்றும், வேறொரு கதாபாத்திரம் என்றும் சொல்கிறார்கள். கதாநாயகியாக இப்போது நடித்து வரும் நிலையில், இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தால், தமிழ் சினிமாவின் வழக்கமான சென்டிமென்ட்படி, அவரை மீண்டும் அதே போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கவே அணுகுவார்கள் என்பதால் அந்த ரோலைத் தவிர்த்து விட்டார் என்கிறார்கள்.

இவானாவிற்கு இப்போது 23 வயதுதான் என்பதால் சினிமாவில் சாதனைகள் புரிய வயது இருக்கிறது. ஆகவே பெரிய படம் என அவசரப்பட்டு, அதில் சின்ன ரோல்களை ஒப்புக்கொள்ள வேண்டாம் என அவரது நெருங்கிய நண்பர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அதன் காரணமாகவே படங்களை அவர் பொறுமையாகக் கவனமாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்” என்கிறது அவரது வட்டாரம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.