
100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'சலார்' டிரைலர்
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்கும் 'சலார்' படத்தின் டிரைலர் நேற்று இரவு தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் யு டியூப் தளத்தில் வெளியானது.
ஐந்து மொழிகளிலும் இந்த டிரைலர் 18 மணி நேரங்களுக்குள்ளாகவே 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை புரிந்துள்ளது. ஹிந்தி டிரைலர் 50 மில்லியன், தெலுங்கு டிரைலர் 30 மில்லியன், கன்னட டிரைலர் 8.7 மில்லியன், தமிழ் டிரைலர் 7.9 மில்லியன், மலையாள டிரைலர் 6.7 மில்லியன் பார்வைகளை இதுவரை பெற்றுள்ளது.
எதிர்பார்த்தபடியே 'சலார்' டிரைலருக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைத்திருப்பது படக்குழுவிற்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.