சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்தது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதிலும் ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடினார்கள். படம் மிகப்பெரிய வசூலை பெற்றுள்ளது.