ஷீலா ராஜ்குமார்… ஜி தமிழ் சேனலில் `அழகிய தமிழ் மகள்’ சீரியல், `மனுஷங்கடா’, `டுலெட்’, `கும்பலங்கி நைட்ஸ்’, `திரெளபதி’, `மண்டேலா’ ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர்.
இவர் நடிப்புப் பட்டறை நடத்தி வரும் தம்பி சோழன் என்பவரைக் காதலித்து 2020-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். நடுக்கடலில் வைத்து தனது காதலனைத் திருமணம் செய்து கொண்ட இவரது திருமண புகைப்படங்கள் அந்தச் சமயத்தில் சமூகவலைதளங்களில் வைரலாகியிருந்தன. குறும்படத்தில் பணியாற்றிய போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும், பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காததால் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதாகவும் அப்போது செய்தி வெளியாகியிருந்தது.
திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன்
நன்றியும் அன்பும் @ChozhanV— Sheela (@sheelaActress) December 2, 2023
தொடர்ந்து, ‘பிச்சைக்காரன் 2’, ‘நூடுல்ஸ்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘ஜோதி’ படங்களில் நடித்து வந்தார் ஷீலா. இதற்கிடையில் ஷீலா, அவரது கணவரிடமிருந்து நீண்ட நாளாகப் பிரிந்து வாழ்ந்து வருவதாகப் பேச்சுக்கள் அடிபட்டன. இந்நிலையில் தற்போது ‘திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன்’ எனத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், தன் கணவரைக் குறிப்பிட்டு ‘நன்றியும் அன்பும்’ என்று பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களிலிலும், கோலிவுட் வட்டாரத்திலும் பேசுபொருளாகி வருகிறது.