மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கியதுமே, தெலங்கானா குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இதற்கு கர்நாடகாவில் கிடைத்த வெற்றியை எப்படியும் தெலங்கானாவில் பெற்றுவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் முனைப்பு காட்டியது முக்கிய காரணம். தென்மாநிலங்களில் மீண்டும் கால் பதிக்க விரும்பும் பா.ஜ.க., எப்படியும் தெலங்கானாவில் ஜெயிக்க வேண்டும் என நினைந்து. மேலும் தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது.

இறுதி நேரத்தில் களம் காங்கிரஸின் பக்கம் சாய்ந்தது என்று கூறலாம். இதற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுபவர், தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டிதான். எனவேதான் முதல்வர் சந்திரசேகர் ராவை எதிர்த்து காமாரெட்டி தொகுதியில் களமிறக்கப்பட்டார், ரேவந்த் ரெட்டி. காங்கிரஸ் திட்டமிட்டபடி சந்திரசேகர ராவ்யை பின்னுக்கு தள்ளியிருக்கிறார், ரேவந் ரெட்டி. காலை 9.30 மணி நிலவரப்படி 65 இடங்களில் காங்கிரஸ் முன்னணியில் இருக்கிறது. பிஆர்எஸ் 39 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. இவ்வாறு தெலங்கானா தேர்தலில் ஆளும் பிஆர்எஸ்.க்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கும் ரேவந் ரெட்டியின் பின்னணி என்ன?
இதுகுறித்து நம்மிடம் பேசிய சீனியர் கதர்கள், “ஏபிவிபி, தெலுங்குதேசம் கட்சிக்களில் இருந்தவர்தான் ரேவந்த் ரெட்டி. கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்குதேசம் கட்சியிலிருந்து விலகி, காங்கிரஸில் இணைந்தார். ராகுல் காந்தியுடனும், கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோருடன் நல்ல நெருக்கத்தில் இருக்கிறார். மேலும் அவரின் செல்வாக்கு மற்றும் கடும் உழைப்பை பார்த்த காங்கிரஸ், கே.சி.ஆருக்கு இணையாக ரெட்டியையே முன்னிறுத்தி செக் வைத்தது.

தலைமையின் நம்பிக்கையை காப்பாற்றியிருக்கிறார். இதேபோல் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையும் காங்கிரஸ் தலைவர்களையும், தொண்டர்களையும் ஒன்றிணைப்பதில் முக்கியப் பங்காற்றியது. மேலும் கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த சுனில் கனுகோலு, தெலங்கானா தேர்தலில் வெற்றி பெறுவதற்கும் வியூகங்களை வகுத்து கொடுத்தார். அதுவே இந்த சாதனைக்கு காரணம்” என்கிறார்கள். தெலங்கானாவில் தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை என்றாலும், பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.