சென்னை: “தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ள கட்சிகளுக்கு எனது வாழ்த்துகள். அவர்களது ஆட்சிக் காலம் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கும் நல்ல மாற்றத்தையும், வளர்ச்சியையும் வளத்தையும் அளிப்பதாக அமைய விழைகிறேன்” என்று 4 மாநில தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கட்சிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ள கட்சிகளுக்கு எனது வாழ்த்துகள். அவர்களது ஆட்சிக்காலம் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கும் நல்ல மாற்றத்தையும், வளர்ச்சியையும் வளத்தையும் அளிப்பதாக அமைய விழைகிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக ஆட்சி உறுதியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியோ தெலங்கானாவில் மட்டுமே தடம் பதித்துள்ளது. முழுமையாக வாசிக்க > ம.பி, ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆதிக்கம்; காங்கிரஸ் வசமாகும் தெலங்கானா!