சென்னை: Michaung Cyclone (மிக்ஜாம் புயல்) மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி நடிகர் ரோபோ சங்கர் காயமடைந்திருக்கிறார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் மழை வெளுத்து வாங்கிவருகிறது. காலையில் ஆரம்பித்த மழை இப்போதுவரை விடாமல் தொடர்ந்து பெய்துவருகிறது. இதனால் சென்னையில் மழை நீர் தேங்கியிருக்கிறது. அதனால் மக்களும் கடுமையான சிரமத்துக்கு ஆளாகிவருகின்றனர்.
