மெடாக்,
தெலுங்கானாவில் விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானிகள் இருவர் பலியாகினர்.
தெலுங்கானாவின் ஹைதராபாதில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி பள்ளி உள்ளது. இங்கு விமானப் படையில் சேர்ந்துள்ள இளைஞர்களுக்கு விமானம் ஓட்ட நாள்தோறும் பயிற்சி வழங்கப்படுகிறது.
இதற்காக ஒற்றை இஞ்சின் உடைய ‘பைலடஸ் பி.சி.- 7 எம்.கே. 2’ பயிற்சி விமானம் பயன்படுத்தப்படுகிறது. வழக்கம்போல் நேற்றும் இந்த விமானம் வாயிலாக பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, எதிர்பாராதவிதமாக இந்த விமானம் நேற்று வயல்வெளியில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த விமானி மற்றும் பயிற்சி விமானி இருவரும் பலியாகினர். இந்த தகவலை இந்திய விமானப்படை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
விபத்து குறித்து நீதிமன்ற விசாரணை நடத்தப்படும் என இந்திய விமானப்படை தெரிவித்து உள்ளது.
விமான பயிற்சியில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த விமானம், கடந்த 2008 முதல்இதுவரை ஐந்து முறை விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பலர் பலியாகி உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement