சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் மிக்ஜம் புயல் காரணமாகச் சென்னையில் கனமழை பெய்ததால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கனமழை ஓய்ந்துள்ள நிலையில், மாநகரில் ஒரு சில இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது. சென்னை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. பல்வேறு அமைப்பினர் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு […]
