மும்பை: Aishwarya Rai (ஐஸ்வர்யா ராய்) ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் பிரிகிறார்கள் என்று தகவல் வெளியான சூழலில் அது பொய் என்பது தெரிய வந்திருக்கிறது. உலக அழகி பட்டத்தை இந்தியாவில் எத்தனை பேர் வாங்கினாலும் முதலில் நினைவுக்கு வருவது ஐஸ்வர்யா ராய்தான். அந்த அளவு அவர் தன்னுடைய தாக்கத்தை பலரிடம் செலுத்தியிருக்கிறார்.
