
பைட் கிளப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
லோகேஷ் கனகராஜ் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிடும் முதல் படம் பைட் கிளப். அப்பாஸ் ரஹ்மத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் உரியடி விஜயகுமார் நாயகனாக நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் தற்போது பைட் கிளப் படத்திற்காக கோவிந்த் வசந்தா இசையில் உருவான, யாரும் காணாத என்று தொடங்கும் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. கார்த்திக் நேத்தா எழுதிய இந்த பாடலை, கபில், கபிலன், கீர்த்தனா வைத்தியநாதன் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். இந்த மெலொடி பாடல் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படம் வருகிற 15 ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.