சென்னை: இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அடுத்தடுத்த மனதிற்கு இனிமையான பாடல்களையும் பிஜிஎம்மையும் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து முன்னணியில் உள்ளார். அனல் மேலே பனித்துளியாக இவரது பாடல்கள் ரசிகர்களின் உள்ளங்களை வருடி செல்பவை. கௌதம் மேனனின் மின்னலே படம் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே வசீகரா பாடல் மூலம் அனைவரையும் வசீகரித்தவர் ஹாரிஸ் ஜெயராஜ்.
