Deepak Chahar: 18 வயது பந்துவீச்சாளரால் தீபக் சாஹரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை இனி குளோஸ்…!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த தீபக் சாஹர், குடும்ப காரணங்களால் திடீரென தொடரில் இருந்து விலகினார். இதற்கு முன்பும் இதேபோன்று ஒருமுறை தீபக் சாஹர் இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பாதியில் விலகினார். அவரின் இந்த அணுகுமுறை இந்திய அணிக்கு கடைசி நேரத்தில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இப்படியான சூழலில் அவருக்கு மாற்றான ஒரு வீரர் அடையாளம் காணப்பட்டுள்ளார். வேகப்பந்துவீச்சாளரான அவர் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து நல்ல ரெக்கார்டையும் அந்த 18 வயது வீரர் கொண்டிருப்பதால் விரைவில் இந்திய அணிக்கும் அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. 

யார் அந்த வீரர்?

உண்மையில், தீபக் சாஹருக்கு அச்சுறுத்தல் என்று கூறப்படும் வீரர் வேறு யாருமல்ல, 18 வயது ராஜ் லிம்பானி. தற்போது துபாயில் 2023 ஆசிய கோப்பையில் விளையாடி வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் ராஜ் லிம்பானி உள்ளார்.

 

இந்த தொடரில் இந்தியா மற்றும் நேபாளம் இடையேயான போட்டி டிசம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதில் ராஜ் லிம்பானியின் பங்களிப்பு மிக முக்கியமானது. இந்தப் போட்டியில், வேகப்பந்து வீச்சாளர் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய அணியில் வாய்ப்பு?

இப்போட்டியில், ராஜ் லிம்பானி வெறும் 1.40 என்ற பொருளாதாரத்தில் 7 நேபாள பேட்ஸ்மேன்களை அவர் வீழ்த்தினார். இதன் போது 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுதார். அவர் வீசிய 9.1 ஓவர்களில் 3 மெய்டன் ஓவர்கள் இருந்தன. இந்த சிறந்த பந்துவீச்சு மூலம் 18 வயது பந்து வீச்சாளர் ராஜ் லிம்பானி தனது ஆட்டத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து இதேபோன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அவர் விரைவில் இந்திய அணியில் நுழைய முடியும். அப்படி அவர் இந்திய அணிக்கு வரும்பட்சத்தில் இந்திய அணியில் தனது இடத்தை இழப்பவர்களில் முதன்மையாக இருப்பவர் தீபக் சாஹர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.