நாடு திரும்பும் ஆஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்தார்

இலங்கையில் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் இயன் கெய்ன் (டிசம்பர் 13) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.

இப் பிரியாவிடை சந்திப்பின் போது பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் குணரத்ன, இலங்கையில் கப்டன் கெய்னின் சேவைக்காலத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் ஆயுதப் படைகளுடன் அவர் பேனிய சிறந்த உறவு, இராணுவ இராஜதந்திரம் மற்றும் நல்லெண்ணம் தொடர்பில் பாராட்டு தெரிவித்தார்.

இலங்கையில் தனது பதவிக் காலத்தின் போது பாதுகாப்பு அமைச்சினால் பெற்ற ஆதரவுகளுக்கு கப்டன் கெய்ன் பாதுகாப்பு செயலாளருக்கு தனது நன்றியை தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகராக கடமையேற்றுள்ள கேர்னல் அமண்டா ஜான்ஸ்டனும், இச்சந்திப்பில் கலந்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.