ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் 365 நாட்களும் இலவசம்..!

ஏர்டெல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு 365 நாட்களும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இலவசமாக கிடைக்கும் வகையிலான புதிய ப்ரீப்பெய்ட் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இந்த திட்டத்துக்கான வரவேற்பு அதிகம் இருக்கும் எனபது ஏர்டெல் நிறுவனத்தின் கணிப்பு. நாட்டின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் 37 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பயனர்களுக்கு பல்வேறு ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் மற்றும் பிராட்பேண்ட் திட்டங்களை வழங்குகிறது. நீங்களும் ஏர்டெல் பயன்படுத்துபவராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கானது தான்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த திட்டத்தில் 365 நாட்களுக்கு எந்த கட்டணமும் இல்லாமல் Disney+ Hotstar சந்தாவின் பலனைப் பெறலாம். இது மட்டுமின்றி, டேட்டா தீர்ந்துவிடும் என்ற பதற்றமும் இருக்காது. ஏனெனில் இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் வரம்பற்ற 5ஜி டேட்டாவையும் பெறுகின்றனர். எனவே இந்த திட்டத்தைப் பற்றி கூடுதல் தகவல்களை பார்ப்போம்.

நாம் பேசும் ஏர்டெல் திட்டத்திற்காக, நீங்கள் ஒவ்வொரு நாளும் 9 ரூபாய் மட்டுமே செலவழிக்க வேண்டும். மேலும் இந்த சிறந்த திட்டத்தில் நீங்கள் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். இதில் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் 912 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்திற்கு நீங்கள் 3359 செலவழிக்க வேண்டும். இதில் நீங்கள் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 2.5 ஜிபி தினசரி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளைப் பெறுவீர்கள். இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு நாளும் டேட்டா பேக் தீர்ந்த பிறகும், பயனர்கள் 64kbps வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்தலாம்.

ஒருவேளை நீங்கள் கிரிக்கெட் பார்க்கும் ஆர்வம் கொண்டவராக இருந்தால் இந்த திட்டம் உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். ஏனென்றால் இப்போது இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தான் ஒளிபரப்பப்படுகிறது. அதனை நீங்கள் இலவசமாக பார்ப்பதோடு மட்டுமல்லாமல் ஒரு வருஷத்துக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் திரைப்படங்கள், வெப்சீரிஸ்களையும் இலவசமாக பார்த்து ரசிக்க முடியும். இதற்கு ஏர்டெல்லின் இந்த வருடாந்திர ப்ரீப்பெய்ட் ரீச்சார்ஜ் பிளான் உங்களுக்கு உதவும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.