குழந்தைகளின் பள்ளி ஆண்டு விழா : திரண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்

மும்பையில் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி இயங்கி வருகிறது. இதில் தான் பாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்களின் குழந்தைகள் மற்றும் பல முக்கிய விஐபி.,க்களின் பிள்ளைகள் படித்து வருகின்றனர். நேற்று இந்த பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. இதில் குழந்தைகளின் பெற்றோர்களும் பங்கேற்றனர்.

குறிப்பாக ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா, ஷாரூக்கானின் மகன் ஆப்ராம், சைப் அலிகானின் மகனான தைமூர் அலிகான் உள்ளிட்ட பலர் இந்த பள்ளியில் தான் படிக்கின்றனர். இதனால் அபிஷேக் – ஐஸ்வர்யா தம்பதியர் மற்றும் அமிதாப் பச்சன், ஷாரூக் – கவுரி தம்பதியர், நடிகை கரீனா கபூர் உள்ளிட்ட ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்றனர். மேலும் குழந்தைகளுடன் குழந்தைகளாக இந்த நட்சத்திரங்களும் நடனமாடி குழந்தைகளை ஊக்கப்படுத்தினர்.

விவாகரத்து வதந்திக்கு ஐஸ்வர்யா ராய் முற்றுப்புள்ளி
பாலிவுட் நட்சத்திர ஜோடியான அபிஷேக்பச்சனும் ஐஸ்வர்யா ராயும் விவாகரத்து செய்ய உள்ளதாக தொடர்ந்து தகவல் பரவி வருகிறது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும், ஐஸ்வர்யா ராய் தனியாக வசித்து வருவதாகவும் பாலிவுட்டில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், மும்பையில் உள்ள அம்பானி பள்ளி ஆண்டு விழாவில் இருவரும் ஒன்றாக கலந்துக் கொண்டு, தங்களின் திருமண உறவு குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.