சென்னை: தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், நெல்லை மாநகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் சூழ்ந்துள்ள நிலையில், பல இடங்களில் பாலத்தை தாண்டி தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்த மீட்பு பணிகளில் ஈடுபட நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது. இதைத்தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கிய மக்களை ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. 2 கர்ப்பிணிகள் உள்ளிட்ட 17 பேரை […]
