ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன மிட்செல் ஸ்டார்க்.. எத்தனை கோடிகள் தெரியுமா?

துபாய்,

10 அணிகள் இடையிலான 17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் கடைசியில் தொடங்கி ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி வீரர்கள் தக்க வைப்பு, விடுவிப்பு, பரஸ்பர வர்த்தக அடிப்படையில் வீரர்கள் பரிமாற்றம் ஆகியவை ஏற்கனவே முடிந்து விட்டன.

இந்த நிலையில் கழற்றி விடப்பட்ட வீரர்களுக்கு பதிலாக புதிய வீரர்களை தேர்வு செய்வதற்கான மினி ஏலம் துபாயில் உள்ள பிரபலமான வணிக வளாக அரங்கில் இன்று நடைபெற்று வருகிறது. ஏலம் துவங்கியதில் இருந்தே விறுவிறுப்புக்கு கொஞ்சமும் பஞ்சம் இன்றி வீரர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

ஸ்டார் வீரர்களை தங்கள் அணிக்கு எடுக்க 10 அணிகளும் போட்டா போட்டி போட்டன. குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு ஏலம் போனார். மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா நைட் டைரஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரர் இவ்வளவு தொகைக்கு ஏலம் போவது முதல் முறையாகும். முன்னதாக பேட் கம்மின்சை 20.50 கோடிக்கு ஐதரபாத் அணி இன்று ஏலத்தில் எடுத்ததே அதிகபட்ச தொகையாக இருந்தது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.