Vodafone Idea Entertainment Recharge Plan: இந்திய தொலைத்தொடர்பு துறையில் மூன்றாவது பெரிய நிறுவனம் என்பது வோடபோன் ஐடியா (Vi). அதாவது, ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய பெரும் நிறுவனங்களுக்கு இடையே கடுமையான போட்டியை வோடபோன் ஐடியா மேற்கொண்டு வருகிறது. மேலும் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், போட்டி நிறுவனங்களுடன் போட்டியிடவும் வோடபோன் ஐடியா நிறுவனம் புதிய திட்டங்களை கொண்டு வருகிறது.
இந்த தொடரில், மீண்டும் வோடபோன் ஐடியா நிறுவனம் தனது ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் கீழ் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதில் சிறப்பான பலன்கள் என்னவென்றால், இது வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்றது. இது வாடிக்கையாளர்களின் பாக்கெட்டுகளை பதம் பார்க்காமல் பலன்களை அள்ளித்தரும். இந்த புதிய வோடபோன் திட்டத்தின் அனைத்து விவரங்களையும் இதில் காணலாம்.
Vodafone Idea (Vi) நிறுவனத்தின் இந்த புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் விலை 202 ரூபாய் ஆகும். இந்த 202 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் 1 மாத வேலிடிட்டியுடன் வருகிறது. இதில் கிடைக்கும் பலன்களை பார்த்தாலே இது சாதாரண ரீசார்ஜ் திட்டம் அல்ல என்பதை நீங்களே புரிந்துகொள்வீர்கள். இந்த திட்டத்தில் நீங்கள் அழைப்பு, டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் தொடர்பான பலன்களைப் பெறமாட்டீர்கள்.
இது வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 202 ரூபாய்க்கான பொழுதுபோக்கு ரீசார்ஜ் திட்டம் ஆகும். இந்தத் திட்டம் பயனர்களுக்கு 1 மாதத்திற்கு Vi Movies மற்றும் டிவி ப்ரோ சந்தாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில், பயனர்கள் 13க்கும் மேற்பட்ட ஓடிடி திட்டங்களின் சந்தாவை முற்றிலும் இலவசமாக பெறுவார்கள். இந்த ஓடிடி தளங்களில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், SunNXT, சோனிலிவ் உள்ளிட்டவையும் அடங்கும்.
இது வோடபோன் ஐடியாவின் பொழுதுபோக்கு ரீசார்ஜ் திட்டம் என்று முன்னேர குறிப்பிட்டோம். அதன்படி தொலைத்தொடர்பு பலன்கள், அதாவது காலிங், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றை பெற உங்களுக்கு ஒரு தனி அடிப்படைத் திட்டம் தேவைப்படும். இந்த அடிப்படைத் திட்டத்தில் உங்களுக்கு, வரம்பற்ற குரல் அழைப்பு, டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் வசதிகளைப் பெறலாம்.
ரூ.219 ரீசார்ஜ் திட்டம்
மலிவான விலையில் ஒரு நல்ல அடிப்படையான ரீசார்ஜ் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்களானால், வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 219 ரூபாய் திட்டத்தை நீங்கள் பரிசீலனை செய்யலாம். இந்த ரீசார்ஜ் திட்டத்தில், பயனர்கள் 21 நாட்கள் வேலிடிட்டியை பெறுகிறார்கள். இந்த ரீசார்ஜ் திட்டத்தின் நன்மைகள் என்றால், இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்பு வசதியை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் தினமும் 1 ஜிபி டேட்டா என மொத்தம் 21 ஜிபி டேட்டாவை பெறுகிறார்கள். தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் வசதியையும் பெறுகிறார்கள்.