டெல்லி: மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக, ஏற்கனவே டெல்லி துணைமுதலமைச்சர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஆஜராக அமலாக்கத்துறை 2வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசு கடந்த 2021-2022 காலக்கட்டத்தில் புதிய மதுபானக் கொள்கையை அறிவித்தது. அதன்படி, தனியார் மதுபான விற்பனையாளர்களுக்கு அனுமதி அளித்தது. இந்த விவகாரத்தில் […]
