IPL 2024: பாட் கம்மின்ஸ் 20 கோடி, டிராவிஸ் ஹெட் 6 கோடி – தெறிக்கவிடும் சன்ரைசர்ஸ்

Sunrisers Hyderabad’s Big Buys: துபாயில் நடைபெறும் ஐபிஎல் 2024 ஏலத்தில் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை எந்தவொரு பிளேயரும் பெறாத தொகைக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் (Pat Cummins) பெற்றுள்ளார். அவரை 20.50 கோடி ரூபாய் கொடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sun Risers Hyderabad) அணி ஏலம் எடுத்திருக்கிறது. அத்துடன் உலக கோப்பை இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடிய டிராவிஸ் ஹெட்டையும் சன்ரைசர்ஸ் அணி வாங்கியுள்ளது.

ஐபிஎல் ஏலம் 2024 

துபாயில் ஐபிஎல் ஏலம் 2024 கோகோ கோலா அரங்கில் மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்தியாவுக்கு வெளியே ஐபிஎல் ஏலம் நடைபெறுவது இதுதான் முதன்முறையாகும். அத்துடன் ரசிகர்களுக்கு மத்தியில் நடைபெறும் முதல் ஐபிஎல் ஏலமாகவும் இது அமைந்தது. கொல்கத்தா அணிக்கு சென்றிருக்கும் கவுதம் காம்பீர், டெல்லி அணியின் வீரர் ரிஷப் பன்ட் ஆகியோர் ஏலத்தில் பங்கேற்க நேரடியாக வந்திருந்தனர். 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 

ஏலம் தொடங்கியது முதலே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மிகவும் ஆக்டிவாக இருந்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் பெயர் வந்ததும் அவரை ஏலம் எடுக்க ஆர்வம் காட்டிய சன்ரைசர்ஸூக்கு வெற்றி கிட்டியது. அவரை 6.8 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸூக்கு கடுமையாக போட்டி போட்டது. ஆரம்பத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை மோதிய நிலையில் இறுதி கட்டத்தில் ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் கோதாவில் குதித்தன. முட்டி மோதியபடி சென்ற ஏலத்தின் முடிவில் 20.50 கோடி கொடுத்து பாட் கம்மின்ஸை ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

வரலாறு படைத்த பாட் கம்மின்ஸ்

ஐபிஎல் ஏல வரலாற்றில் இதுவரை இவ்வளவு பெரிய தொகைக்கு எந்தவொரு பிளேயரும் ஏலம் எடுக்கப்பட்டதில்லை. சாம் கரன், கேம்ரூன் கிரீன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போனார்கள். அதிகபட்சமாக 18.5 கோடிக்கு சாம் கரனை ஏலம் எடுத்தது பஞ்சாப். பாட் கம்மின்ஸூக்கு 20.50 கோடி கொடுத்ததன் மூலம் இந்த முறை அந்த வரலாற்றை முறியடித்திருக்கிறது சன்ரைசர்ஸ். மேலும், இவ்வளவு தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட பாட் கம்மின்ஸ், ஐபிஎல் வரலாற்றில் மிகவும் மதிப்பு மிக்க வீரராக மாறியுள்ளார்.

விலை போகாத ஸ்டீவ் ஸ்மித்

அதேநேரத்தில் வியப்பளிக்கும் வகையில் ஸ்டீவ் ஸ்மித்தை எந்த ஐபிஎல் அணியும் வாங்குவதற்கு ஆர்வம் காட்டவல்லை. அவருடன் ரைலி ரூசோவ்-வையும் எந்த அணியும் வாங்கவில்லை. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.