‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என ஒற்றுமையின் வலிமையை பாடலால் அறிவுறுத்தியவர் பாரதியார். உலகில் ஒற்றுமையை வளர்க்கும் விதமாக 2005 முதல் டிச., 20ல் ஐ.நா., சார்பில் சர்வதேச மனித ஒற்றுமை தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், ஜாதி, மத மோதல், உள்நாட்டு சண்டை, பயங்கரவாத செயல் குறையவில்லை. போரினால் மக்கள் அகதியாக மாறும் அவலம் உள்ளது. மக்களிடம் ஒற்றுமை எண்ணத்தை வளர்த்து, ஏற்றத்தாழ்வுகளை குறைத்து வறுமையை ஒழிப்பதே இத்தினத்தின் நோக்கம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement