பட்ஜெட் விலையில் லாவா ஸ்டார்ம் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள்

புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா ஸ்டார்ம் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.

இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா ஸ்டார்ம் 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.78 இன்ச் ஃபுள் ஹெச்டி+ டிஸ்பிளே
  • மீடியாடெக் டிமன்சிட்டி 6080 சிப்செட்
  • 8ஜிபி ரேம்
  • 128ஜிபி ஸ்டோரேஜ்
  • பின்பக்கத்தில் இரண்டு கேமரா. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
  • 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 5,000mAh பேட்டரி
  • 33 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் வசதி
  • ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
  • டைப்-சி சார்ஜிங் போர்ட்
  • ட்யூயல் 5ஜி சிம் சப்போர்ட்
  • வரும் 28-ம் தேதி இந்த போன் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ரூ.13,499. விலையில் அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.