சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 3ஆண்டு சிறை தண்டனை பெற்ற பொன்முடி, தனது எம்எல்.ஏ மற்றும் அமைச்சர் பதவிகளை இழந்த நிலையில், இன்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டதை, சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்த நிலையில், வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்முடி, அவரது மனைவி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என டிச.19-ஆம் தேதி தீா்ப்பளித்து தண்டனை விவரங்களை டிசம்பர் 21 அறிவித்தாா். […]