Indian passenger plane makes emergency landing | இந்திய பயணியர் கடத்தலா அவசரமாக தரையிறங்கிய விமானம்

பாரிஸ் :ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து நிகாரகுவேவுக்கு 300க்கும் மேற்பட்ட இந்திய பயணியருடன் சென்ற விமானத்தை பிரான்ஸ் அதிகாரிகள் பாரிஸ் விமான நிலையத்தில் நேற்று அவசரமாக தரையிறக்கினர்.
பயணியர் கடத்தப்படுவதாக சந்தேகம் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து மத்திய அமெரிக்க நாடான நிகாரகுவேவுக்கு 303 பயணியருடன் ருமேனியாவின் ‘லெஜென்ட் ஏர்லைன்ஸ்’ விமானம் நேற்று புறப்பட்டது. இந்த பயணியரில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என கூறப்படுகிறது.
இந்த விமானத்தில் உள்ள சிலர் கடத்தப்படுவதாக ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாரிஸ் அருகேயுள்ள வாட்ரி விமான நிலையத்தில் அந்த விமானம் நேற்று அவசரமாக தரையிறக்கப்
பட்டது. அதில் இருந்த பயணியரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் இரண்டு பேரை மட்டும் சந்தேகத்தின் பேரில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருவதாக பிரஞ்சு
அதிகாரிகள் தெரிவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.