புதுடில்லி:டில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி மூத்த தலைவரும், எம்.பி.,யுமான சஞ்சய் சிங்கின் ஜாமின் மனு மீது இன்று மாலை தீர்ப்பு வழங்கப்படுகிறது.
டில்லி அரசின் 2021-2022ம் ஆண்டுக்கான புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரையடுத்து, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை வழக்குப் பதிவு செய்தன.
அப்போதைய துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மூத்த தலைவரும், எம்.பி.,யுமான சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ஜாமின் கேட்டு சஞ்சய் சிங் தாக்கல் செய்த ஜாமின் மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.கே.நாக்பால், இன்று மாலை 3:30 மணிக்கு தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார்.
கைது செய்யப்படுவதற்கு முன், அமலாக்கத் துறை தன்னை ஒரு முறை கூட விசாரணைக்கு அழைக்கவில்லை என்றும், குற்றம் சாட்டப்பட்டவரின் வாக்குமூலங்களில் முரண்பாடுகள் இருப்பதாகவும் ஜாமின் மனுவில் சஞ்சய் சிங் கூறியுள்ளார்.
மணீஷ் சிசோடியா பிப்ரவரியிலும், சஞ்சய் சிங் அக்டோபர் 4ம் தேதியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement