மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் (26) உணர்வுபூர்வமாக தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளீதரனின் ஆலோசனைக்கு அமைவாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
இதன் போது தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதனை தொடர்ந்து அனர்த்தங்களால் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தேசிய பாதுகாப்பு தினத்தை மையப்படுத்தி அனர்த்தங்களின் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை உத்தியோகத்தர்களுக்கு வழங்கினார்.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எஸ்.எம்.பஸீர், மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கே.மதிவண்ணன், மாவட்ட செயலக பொறியியலாளர் எம்.சுமன், மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், மாவட்ட அனர்த்த நிவாரண உத்தியோகத்தர்கள், அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உள்ளிட்ட மாவட்ட செயலக உயரதிகாரிகள், உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.