சென்னை: நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. விஜயகாந்த்தின் மறைவு ரசிகர்கள், திரையுலகினர் என அனைவரையும் சோகத்தில் தள்ளியிருக்கிறது. இந்த சூழலில் அவர் குறித்து இதில் பார்க்கலாம். மதுரையில் கடந்த 1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி கே.என்.அழகர்சாமிக்கும், ஆண்டாளுக்கும் மகனாக விஜயராஜ் பிறந்தார்.
