தரமணி,தரமணி, துரைப்பாக்கம் பகுதியில், கல்லுாரி மாணவர்கள், கட்டுமான தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சா வியாபாரம் செய்யப்படுகிறது. தரமணி போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில், திரிபுராவில் இருந்து கஞ்சா கடத்தி வருவது தெரிந்தது.
திரிபுராவை சேர்ந்த ஷபீக் மியா, 32, இமான் உசேன், 34, ஆகியோரை, நேற்று, போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பெரும்பாக்கத்தில் தங்கிய இவர்களில், ஷபீக் மியா தனியார் மருத்துவமனையில் துாய்மை ஊழியராகவும், இமான் உசேன், பாஸ்ட் புட் கடையிலும் பணி புரிந்தனர்.
மாதம், இரண்டு, மூன்று முறை திரிபுரா சென்று கஞ்சா கடத்தி வருவர். இங்கிருந்து, விமானத்தில் சென்று, கஞ்சாவை அதிகாலை சென்னைக்கு வரும் ரயிலில் கடத்தி வந்துள்ளனர்.
கஞ்சாவை, இங்குள்ள சில்லறை வியாபாரிகளிடம் கொடுத்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement