
புது தொடரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார் நடிகை சுஜிதா தனுஷ். தமிழ் சின்னத்திரைக்கு நீண்ட இடைவெளிக்கு பின் வந்திருந்த சுஜிதாவுக்கு ரசிகர்களின் ஆதரவும் பெரிதாக கிடைத்தது. ஆனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 1 முடிவுக்கு பின் சீசன் 2 விலும் அவரே நடிப்பார் என ரசிகர்கள் கருதி வந்த நிலையில் அவருக்கு பதிலாக நிரோஷா தான் நடித்து வருகிறார். இதனால், சுஜிதா தனுஷ் மீண்டும் எப்போது நடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில் கலைஞர் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள கெளரி என்ற தொடரில் நடிக்க சுஜிதா தனுஷ் கமிட்டாகியுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் சுஜிதாவிற்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.