மஹத்தின் கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா

வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் சார்பில் பேவின்ஸ் பால் தயாரிப்பில், இயக்குநர் பிரபுராம் இயக்கத்தில், மஹத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா தத்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா'. பாடல்களுக்கு தரண் குமார் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை கார்த்திக் கிருஷ்ணன் உருவாக்கியிருக்கிறார். இனியன் ஜே ஹாரிஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் பற்றி இயக்குனர் பிரபுராம் கூறியதாவது: ரொமான்ஸ் காமெடி ஜானரில் நகர்ப்புற பின்னணியில் உருவாக்கப்பட்ட கதை. மஹத் வடசென்னையைச் சேர்ந்த பையனாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாகி இருந்தாலும் இதில் சில உணர்ச்சிகரமான தருணங்களும் இருக்கிறது. பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக நடிக்கும் ஐஸ்வர்யா மற்றும் மஹத்தின் ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி நிச்சயம் ரசிகர்கள் மனதைக் கவரும்.

இந்த திரைப்படத்தில் வில்லனாக ஆதவ் சசி என்ற புதுமுகம் நடிக்கிறார். நடிகரின் சண்டை காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. இதனை 'தங்கலான்' சண்டை பயிற்சியாளரான ஸ்டன்னர் சாம் செய்துள்ளார். யோகிபாபு மற்றும் மொட்ட ராஜேந்திரனின் காமெடி இந்தப் படத்தில் நிச்சயம் பேசப்படும். முழுக்க முழுக்க காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ளது. என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.