சிம்பாப்வே அணியுடனான ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான 17 வீரர்கள் கொண்ட இலங்கை அணியின் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் தலைவராக குசல் மெண்டிஸ், உப தலைவராக சரித் அசலங்க, பெத்தும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, சஹன் ஆரச்சிகே, நுவனிது பெர்னாண்டோ, தசுன் ஷானக, ஜனித் லியனகே, மஹிஷ் தீக்ஷன, டில்ஷான் மதுஷங்க, துஷ்மந்த சமிர, துனித் வெல்லாலகே, பிரமோத் மதுஷான், ஜெப்ரி வென்டசே, அகில தனஞ்சய மற்றும் வனிது ஹசரங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடிய தனஞ்சய டி சில்வா, கசுன் ராஜித மற்றும் துஷான் ஹேமந்த ஆகியோருக்கு இந்த அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. மாறாக கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடாத அவிஷ்க பெர்னாண்டோ, சஹான் ஆரச்சிகே, நுவனிந்து பெர்னாண்டோ, ஜெப்ரி வென்டர்சே மற்றும் அகில தனஞ்சய ஆகியோருக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் உபுல் தரங்க தலைமையிலான தெரிவுக்குழு, சிம்பாப்வே சுற்றுப்பயணத்தின் போது வெளியேறிய வீரர்களின் மற்றும் அணியில் தொடர்ந்து இருக்கும் வீரர்களின் திறமைகளை ஊடகங்களுக்கு அறிவித்தது.
‘திறமையாளர்களுக்கு இடம் கொடுப்பதுதான் எமது புதிய குழுவின் கொள்கை. இளம் அணியுடன் முன்னோக்கி செல்லும் கதை எங்களிடம் இல்லை. கிரிக்கெட்டில் அனுபவம் முக்கியம். தேவைப்படும் நேரத்தில் திறமைகள் மத்தியில் இருக்கும் எந்த வீரரும் பரிசீலிக்கப்படுவார்கள். குசல் மற்றும் வனிந்து ஆகிய இரு தலைவர்;களுடன் ஒருநாள் மற்றும் டி20 அணிகளை முன்கொண்டு செல்வோம்.
சமீபகாலமாக குசல் மெண்டிஸ் ஒழுக்கமற்ற முறையில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது குறித்து அவரது விளையாட்டு கழகம் விசாரணை நடத்தி அறிக்கை தருவதாக கூறியது. அந்த அறிக்கை கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்போம்’ என்று உபுல் தரங்க கூறினார்.
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான தொடரில் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் அடங்கும். ஒருநாள் போட்டிகள் எதிர்வரும் 6, 8 மற்றும் 11 ஆம் திகதிகளிலும், 20-20 போட்டிகள் 14, 16 மற்றும் 18 ஆம் திகதிகளிலும் நடைபெறவுள்ளன. இந்த தொடரின்; அனைத்து போட்டிகளும் கொழும்பு ஆர் பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.