சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 23 பேருக்கு ஜே.என்.1.1 வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக கூறியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுமக்கள் முக்கவசம் அணிவது நல்லது என்றும் குறிப்பாக வயதானோர், குழந்தைகள் பொது இடங்களில் முககவசம் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். மேலும், மிச்சாங் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும், மருத்துவ கட்டமைப்புகளை சரிசெய்வதற்கு ரூ.49 கோடி தொகை மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் […]
