பாதுகாப்பு அமைச்சின் புதிய பதில் மேலதிக செயலாளர் – (பாதுகாப்பு) நியமனம்

பாதுகாப்பு அமைச்சின் புதிதாக நியமிக்கப்பட்ட பதில் மேலதிகச் செயலாளர் – (பாதுகாப்பு) திரு.ஹர்ஷ விதானாராச்சி 2024 ஜனவரி 01ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்

இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட தர அதிகாரியான திரு. விதானாராச்சி, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது சேவையில் பல அமைச்சுக்களிலும், சுவீடனில் உள்ள இலங்கைத் தூதரகத்திலும் பணியாற்றியுள்ளார்.

இந்த நியமனத்தை பொறுப்பேற்பதற்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராக (பாதுகாப்பு) பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.