சென்னை: வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 50 சதவீதம் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார். நடப்பாண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியும், தேர்தல் மற்றும் தேர்தல் கூட்டணி, வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாக கட்சி மாநில தலைவர்களுடன் […]
