INDvsSA: தெ.ஆ எதிராக டாப் கிளாஸ் பவுலிங், பும்ரா 6 விக்கெட் – 79 ரன்கள் எடுத்தால் இந்தியா வெற்றி

கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணிக்கு 79 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்துவதற்கு பதிலடி கொடுக்க இந்திய அணிக்கு சூப்பரான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

) January 4, 2024

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்றது. இதில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்திருந்த தென்னாப்பிரிக்க அணி 2வது இன்னிங்ஸை தொடர்ந்தது. சிறப்பாக ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் மார்கிரம் மட்டும் சதமடித்தார். அவர்103 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதில் 2 சிக்சர்களும் 17 பவுண்டரிகளும் அடங்கும். மற்ற பேட்ஸ்மேன்கள் இந்த பிட்சில் அடிக்க திணறும்போது மார்கிரம் அதிரடியாக ஆடினார். ஆனால் அவருக்கு இணையாக மற்ற தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் யாரும் ஆடவில்லை. 

ohns) January 4, 2024

தென்னாப்பிரிக்க அணியில் இரண்டாவது அதிகபட்ச ரன் 12. கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் டீன் எல்கர் எடுத்தது. எஞ்சிய வீரர்கள் அனைவரும் மிகவும் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறிவிட்டனர். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா அபாரமாக பந்துவீசினார். அவருடைய பந்துவீச்சை எதிர்கொள்வதில் தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் மிகவும் சிரமப்பட்டனர். அவர் 6 விக்கெட்டுகளை எடுத்தார். இவரின் அபார பந்துவீச்சால் தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய சிராஜ் இந்த இன்னிங்ஸில் 1 விக்கெட் எடுத்தார். அதேபோல் பிரசித் கிருஷ்ணாவும் ஒரு விக்கெட் எடுத்தார்.

6 wicket haul at Melbourne.
5 wicket haul at Nottingham.
5 wicket haul at Nottingham.
pic.twitter.com/PSMSuHaiJo

— Johns. (@CricCrazyJohns) January 4, 2024

இதனால் இந்திய அணி 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கு அமைந்தது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை 1-1 என சமன் செய்ய முடியும். முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றிருந்தது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இரு அணிகளும் 4 இன்னிங்ஸ் விளையாடியபோதும் 5 நாட்கள் கொண்ட போட்டி 2 நாட்களிலேயே முடிவடைகிறது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.